நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதனடிப்படையில், சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம், வஊசி மார்க்கெட் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக 92.3 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்து நிலையத்தை அதி நவீன இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று சேலத்தில் பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மையப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்வித்து பொழுதுபோக்கு பூங்காவாக செயல்பட்டு வந்த அண்ணா பூங்கா மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன பூங்காவாக புனரமைக்கப்படவுள்ளது. இங்கு அனைத்து நவீன விளையாட்டு கருவிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய நவீன பூங்காவாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளது. சேலம் மாநகர மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்த சிங்களம் அண்ணா பூங்காவை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’