இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலை மற்றும் கலாசார பண்பாட்டிற்கான இந்திய தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், "ஆடை அணிகலன் மனித கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும். அந்தவகையில் சேலத்தில் வெள்ளி ஆபரணங்கள் வரலாற்று சிறப்புமிக்கது. மிகவும் பழமையான பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.
நூற்றாண்டுகள் கடந்து இன்றும் சேலம் கொலுசு உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெண்கள் விரும்பி அணியும் வெள்ளி ஆபரணங்களில் சேலம் கொலுசு முதலிடம் வகிக்கிறது.
சேலத்தில் இருந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், அரபு நாடுகளுக்கும், பிற வெளிநாடுகளுக்கும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தகைய பாரம்பரிய பெருமை மிக்க சேலம் கொலுசு புவிசார் குறியீடு பெற வேண்டியது அவசியமாகி உள்ளது. அதற்காக எங்கள் அமைப்பு விண்ணப்பித்து உள்ளது. அதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு!