ETV Bharat / state

மக்கள் கால்களில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு! - சேலம் அதிமுக வேட்பாளர்கள்

சேலம்: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தனர்.

salem admk candidates touched people feet for vote
அதிமுக
author img

By

Published : Dec 21, 2019, 8:42 PM IST

சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இன்று சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி, குமரன் நகர், குமரன் வட்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் சாந்தி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண்கள் கிராம பகுதிகளில் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வேட்பாளர்கள், பொதுமக்களின் கால்களில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் தெரிவித்தனர். வேட்பாளர்களும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களும் வாகனங்களில் செல்லாமல் பல மைல் தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்.

அதிமுகவினர் மக்கள் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பு!

இதையும் படியுங்க: அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு: போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

Intro:சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது.வேட்பாளர்கள் பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தனர்.Body:
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள் .மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இன்று சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி, மற்றும் குமரன் நகர். குமரன் வட்டம்,
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் சாந்தி ராஜ்குமார்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண்கள் கிராம பகுதிகளில் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்கள் பொதுமக்களின் கால்களில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் தெரிவித்து வாக்கு சேகரித்தனர்.

வேட்பாளர்களும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களும் வாகனங்களில் செல்லாமல் பல மைல் தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.