ETV Bharat / state

சேலத்தில் 60 அடி ஆழ கிணற்றில் லாரி கவிழ்ந்து விபத்து!

author img

By

Published : Sep 23, 2020, 11:32 AM IST

சேலம்: மணல் லாரி ஒன்று 60 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பனார்.

well
well

சேலம் அடுத்த உள்ள கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி உள்ளது. இந்தப் பகுதியில் வசித்துவரும் சிலர் வீட்டு மனைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

salem a load lorry accidentally fell in a 60-ft well
கிணறு
மனை அமைக்கும் பகுதிக்கு நேற்று மாலை மண் பாரம் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் லோகநாதன், வந்து கொண்டிருந்தார். லாரி, புது ஏரி அருகே வந்தபோது ஒட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த 60 அடி ஆழம் உள்ள தரைமட்ட கிணற்றில் அப்படியே கவிழ்ந்தது.
முழுமையாக கவிழ்வதற்கு முன் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியில் இருந்து வெளியேறி நல்வாய்ப்பாக உயிர் தப்பி கிணற்றின் மேலேறி வந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தனர். இததனால் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கிணற்றின் அருகே பொதுமக்கள்
பின்னர் லாரி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு மூன்று கிரேன்களை அழைத்து வந்தார். பிறகு சுமார் 4 மணி நேரம் போராடி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து மூழ்கிய லாரியை மேலே, கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர்.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற லாரி ஓட்டுநர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.