ETV Bharat / state

சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ரவுடி - salem central prison

சேலம்: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rowdy
author img

By

Published : Aug 8, 2019, 12:53 PM IST

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தேவன் பிரகாசம். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில், பிளேடால் கழுத்தை அறுத்து தேவன் பிரகாசம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், கழுத்துப் பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற ரவுடி

இது குறித்து ரவுடி தேவன் பிரகாஷ் கூறுகையில், சிறையில் உயர் அலுவலர்களுக்கு தெரியாமல் சௌந்தரராஜன் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் தரக்குறைவாக பேசி அடித்து துன்புறுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறையில் உள்ள தனது நண்பர்களையும் சிறைக்காவலர்கள் தாக்குகின்றனர். எனவே, நியாயம் கிடைக்கும் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றார்.

இவர் ஏற்கனவே இரண்டு முறை கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

Intro:சேலம் மத்திய சிறையில் பிரபல ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை. சிறைக்காவலர்கள் தரைகுறைவாக பேசி எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு.

Body:சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தேவன் பிரகாசம். இவன் மீது கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இவர் தற்போது நாமக்கல்லில் வாசித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்கள் தரக்குறைவாக பேசிய அடித்து கொடுமைப்படுத்துவதாக ஒரு பிரபல ரவுடி தேவன் பிரகாசம் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றுள்ளார். கழுத்துப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரபல ரவுடி தேவன் பிரகாஷ் கூறும்பொழுது சிறையில் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சௌந்தரராஜன் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் தரக்குறைவாக பேசி அடித்து துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். சிறையில் உள்ள நிறைய நண்பர்களை என்னைப் போன்று தான் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அவர் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

பிரபல ரவுடி தேவன் பிரகாசம் ஏற்கனவே இரண்டு முறைக்கு மேல் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.