சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் ஏழாம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறேன். புதிய அமைச்சரவையில் கட்டாயம் பாஜகவுக்கு இடம் உண்டு. அவர்கள் இல்லாமல் இந்த ஆட்சி சாத்தியமில்லை. தற்போது உள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முழு ஒத்துழைப்பு தருவார் என நம்புகிறேன்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ஆக்சிஜன் வழங்கக்கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்