ETV Bharat / state

ரயில் நிலைய மேற்கூரை சீரமைப்புப் பணியில் அதிர்ச்சி - மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி! - Salem District News

சேலம்: ரயில்வே நிலைய மேற்கூரை சீரமைப்புப் பணியின் போது, தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்காக தொழிலாளியை அனுப்பி வைக்கும் அதிகாரிகள்
author img

By

Published : Nov 8, 2019, 7:19 PM IST

சேலம் ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையின் மேற்கூரையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பணியில் கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மேற்கூரையின் மேல்சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பி மீது மணி எதிர்பாராமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, அவர் படுகாயமடைந்தார். இதைப் பார்த்த பயணிகள் மணியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்காக தொழிலாளியை அனுப்பி வைக்கும் அதிகாரிகள்

மேற்கூரை சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பயணிகள் கூறுகையில், 'ரயில்வே காவல் நிலையம் முன்பே விபத்து நடைபெற்ற நிலையிலும், காவலர்கள் யாரும் மீட்க முன் வரவில்லை. உயர் கம்பிகள் செல்லும் இடத்தின் அருகே பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல், பணியை மேற்கொண்டதால் தான் விபத்து ஏற்பட்டு உள்ளது' தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு - கன்னியாகுமரியில் நடந்த சோகம்!

Intro:
சேலம் ரயில்வே நிலையத்தில் மேற்கூரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்ட பணியாளர் மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.Body:

சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையின் மேற்கூரை புனரமைப்பு பணிகளை ரயில்வே ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று
சேலம் அடுத்தகாமலாபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவரும் மேற்கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அருகே இருந்த ரயிலை இயக்கும் உயர் மின் பாதை கம்பிகளின் மீது மேற்கூரை மோதி, மணி மின்சார தாக்குதலுக்கு ஆளாகி மேற்கூரையின் மீது தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள்
அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அனுப்பி வைத்தனர். 80 சதவீதம் படுகாயமடைந்த மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Conclusion:
சேலம் ரயில்வே காவல் நிலையம் முன்பே விபத்து நடைபெற்ற நிலையிலும் யாரும் மீட்க முன்வரவில்லை என்று பயணிகள் கவலை தெரிவித்து உள்ளனர். உயர் கம்பிகள் செல்லும் இடத்தின் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.