தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்ய இரு முறை தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, தொகுதிப் பங்கீட்டிற்கு பின் இன்று தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவில்லை எனப் பல கருத்துகள் எழுந்த நிலையில், இன்று (மார்ச்.28) தமிழ்நாட்டிற்கு வரும் ராகுல், தேர்தல் பரப்புரையிலும், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்