ETV Bharat / state

மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு! - மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

சேலம்: கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் சடலத்தை அடக்கம் செய்ய ஊருக்குள் எடுத்து வரக்கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

manivasakam home town
author img

By

Published : Nov 1, 2019, 9:16 AM IST

கேரள காட்டுப்பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மணிவாசகம் (57). இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர். மணிவாசகம் கேரள காட்டுப்பகுதியில் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்ததாகவும், அப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நேற்றுமுன் தினம் கேரளா சென்று மணிவாசகத்தின் உடலைப் பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். இந்நிலையில், ராமமூர்த்தி நகர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வரக் கூடாது என முடிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால், ஊருக்கு அருகில் உள்ள மணிவாசகத்திற்கு சொந்தமான நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் அப்பகுதி நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலைப் பெற கேரளா செல்லும் அவரது தங்கை!

Intro:கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்கலைட்
மணி வாசகத்தை சொந்த ஊரில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு.
சொந்த தோட்டத்தில் இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் முயற்சி.Body:
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் மணி வாசகத்தின் சடலத்தை ஊருக்குள் எடுத்து வரக்கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் மணிவாசகம்,
57 வயதான மணிவாசகரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகிலுள்ள ராமமூர்த்தி நகர் ஆகும்.
இந்த ஊர் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் உள்ளது அடர்ந்த காட்டுப்பகுதி.
துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மணிவாசகம்பட்டதாரி ஆவார்.

இவர் கேரளா காட்டுப்பகுதியில் சிலருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்ததாகவும் ,
அப்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவரது மனைவி கலா. இவரும் நக்சலைட் ஆவார். இவர் தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராமமூர்த்தி நகரில் வசிக்கும் அவரது தங்கை லட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து
மணிவாசகத்தின் தங்கை லட்சுமி மணிவாசகத்தின்
சடலத்தை வாங்க நேற்று (புதன்) கேரளா சென்றுள்ளார் .சடலத்தை பெற்று அவர் ராமமூர்த்தி நகர் வந்து இறுதி சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ராமமூர்த்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் நக்சலைட் மணிவாசகத்தின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வரக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர் .

நேற்று ஊர்மக்கள் ஒன்றுகூடி மணிவாசகத்தின் சடலம் ஊருக்குள் எடுத்து வரக்கூடாது என முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் மணிவாசகத்தின் உறவினர்கள்
மணிவாசத்திற்கு சொந்தமாக நிலம் இரண்டு ஏக்கர் நிலம் ஊருக்கு அருகில் உள்ளது . இந்த நிலத்தில் மணிவாசகத்தின் சடலத்தை புதைக்க உறவினர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.இதையடுத்து ராமமூர்த்தி நகரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது .

கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ராமமூர்த்தி நகர் வந்து நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாலிபர்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி அளித்தார். இதையடுத்து அவரை தேடிவந்த போலீசார் பின்னர் மணிவாசத்தை கைது செய்தனர் .

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவாசகம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்தவர் தலைமறைவாகிவிட்டார்.
இதன்பிறகு 2012ம் ஆண்டு தமிழக கியூ பிரிவு போலீசார் மணிவாசகத்தை கைது செய்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
இவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

இவர் மீது சேலம் டவுன் காவல் நிலையம் மற்றும் பள்ளப்பட்டி மற்றும் தருமபுரி மாவட்டம்
மதிகோன் பாளையம் மற்றும் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.

பொதுமக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் செய்யத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
தற்போது மணிவாசகம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தமிழக மாநில குழு உறுப்பினராக உள்ளார்.

தமிழக போலீசார் இவரை தேடி வந்த நிலையில்தான் கேரள போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.