ETV Bharat / state

ரோட்டை மறித்து பிறந்தநாள் கொண்டாடிய திமுக நிர்வாகி.. சேலத்தில் நடந்தது என்ன? - ஏத்தாப்பூர்

சேலம் அருகே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக பஞ்சாயத்து தலைவரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையை மறைத்து பிறந்தநாள் கொண்டாடிய திமுக பஞ்சாயத்து தலைவர் - சர்சையை கிளப்பிய கொண்டாட்டம்

author img

By

Published : Jan 7, 2023, 10:54 PM IST

சாலையை மறைத்து பிறந்தநாள் கொண்டாடிய திமுக பஞ்சாயத்து தலைவர் - சர்சையை கிளப்பிய கொண்டாட்டம்

சேலம்: ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன். இவர் திமுகவின் அப்பகுதி ஒன்றிய துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில், ஏத்தாப்பூர் மேம்பாலத்தில் அடியில் உள்ள சுரங்கப்பாதையை மறித்து, சாலை நடுவே, டேபிள் போட்டு, தனது பிறந்தநாளை கேக் வெட்டி ஆதரவாளர்களுடன் கொண்டாடினர்.

அப்போது அந்த வழியே ஆத்தூரில் இருந்து அரூர் செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் அந்த வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திமுகவினர் நூறுக்கும் மேற்பட்டோர் சாலையை வழிமறித்து பட்டாசு வெடித்து பிறந்த நாள் கொண்டாடியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் செல்லும் சாலையை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு எங்கள் நாடு; விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லை என்றால் ஓடுங்கள் - ஆளுநர் கருத்துக்கு சீமான் பதில்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.