ETV Bharat / state

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தாக்கிய காவல் துறையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம்

சேலம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மர்மமான உயிரிழப்புக்கு நியாயம் கேட்டுப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தாக்கிய, காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
author img

By

Published : Jun 3, 2020, 9:18 PM IST

சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி சரவணன் மீது, அதே பகுதியைச் சேர்ந்த திலகா, ரவி தம்பதியினர் காவல் துறையில் பொய் புகார் அளித்ததுள்ளனர். அதனால் அவரைக் சூரமங்கலம் காவல் துறையினர் மே 21ஆம் தேதி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து வீடு திரும்பிய அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார் . அதன்பின் மே 22ஆம் தேதி அவர் படுக்கையில் படுத்திருந்தபடியே உயிரிழந்தார்.

இதனையறிந்த சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாவட்ட செயலாளருமான ஐ. ஞானசௌந்தரி, அவரது கணவர் இருதயசாமி காவல் துறையினரிடம் நியாயம் கேட்டு போராடினர். அதில் அவர்களைக் காவல் துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதன் காரணமாக அத்துமீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேலு, மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.