சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டியில் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை கலந்துகொண்டார். மேலும் சக்திவேல், சித்ரா, மனோன்மணி உள்ளிட்ட அரசு அலுவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
சேலத்தில் பொங்கல் பரிசானது, இலங்கை வாழ் தமிழர்கள் உட்பட ஒன்பது லட்சத்து 72 ஆயிரத்து 118 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 577 நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
இவ்விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது,
பொங்கல் திருநாளை தாய்மார்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில் பொங்கல் பரிசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலமாகவே பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் 44 புள்ளி 78 சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு, ஆளும் அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் காரணம். முதலமைச்சரின் ஆளுமை, ஆட்சி திறனால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகரித்து, அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்குக்காக கொடுத்த பரிசுப்பொருட்கள் - மனம் உறுத்தி கோயிலில் ஒப்படைத்த நேர்மையாளர்