சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை மூங்கில் பாடி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (70). இவர் மார்ச் 10ஆம் தேதி மாலை பஜனை மடம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து பத்மாவதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: WATCH: பால் வாங்க சென்ற பெண்ணிடம் செயினைப் பறிக்க முயற்சி