ETV Bharat / state

அடியாள்களை அழைத்து வந்து உறவினர்களை தாக்கிய காவலர்!

அடியாள்களை அழைத்து வந்து உறவினர்களை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

police attacked his relatives in selam  selam news  selam latest news  attempt murder  murder  selam police attacked youth  சேலம் செய்திகள்  கொலை வழக்கு  கொலை முயற்ச்சி  இளைஞரை காவலர் தாக்குதல்  சேலத்தில் இளைஞரை காவலர் தாக்குதல்  இளைஞரை தாக்கிய காவலர்
பாதிக்கப்பட்டவர்
author img

By

Published : Aug 6, 2021, 7:54 PM IST

சேலம்: எம். பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25), அசோக்குமார் (29) ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சேலம் ஆயுதப் படை காவலராக பணியாற்றி வரும் மாயவன் (27) என்பவர் உறவினர் ஆவார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 5) இரவு பெருமாபாளையம் பகுதியில், மது போதையில் இருந்த ஆயுதப் படைக் காவலரான மாயவன், ஊரில் உள்ள இளைஞர்களிடம் இருசக்கர வாகன அபராத தொகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

police attacked his relatives in selam  selam news  selam latest news  attempt murder  murder  selam police attacked youth  சேலம் செய்திகள்  கொலை வழக்கு  கொலை முயற்ச்சி  இளைஞரை காவலர் தாக்குதல்  சேலத்தில் இளைஞரை காவலர் தாக்குதல்  இளைஞரை தாக்கிய காவலர்
காவலர் மாயவன்

இளைஞர்களை தாக்கிய காவலர்

இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினரான அருண்குமார், அசோக் குமார் என்ற இளைஞர்களை, சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து மாயவன் தப்பியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 15 அடியாட்களை அழைத்து வந்து , அருண் குமார், அசோக்குமாரை வீடு புகுந்து தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அருண்குமார், அசோக்குமார் இருவரும், ஆயுதப்படை காவலர் மாயவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவரே இப்படியா?

பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அருண்குமார், அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவலர் சீருடை அணிந்த காவலர் பொதுமக்களை சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர். ஆனால் அவரே அடியாள்களை ஏவி எங்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது மிகவும் வேதனையாக உள்ளது.

எனவே அவர் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர் மக்களை பாதுகாக்க சேலம் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: காணாமல் போனவர் சொந்த வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.