2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அரசின் உத்தரவை மீறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நெகிழிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் சேலம் சிவதாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்துவருவதாக சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் அலுவலர்கள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தடைசெய்யப்பட்ட நெகிழிக் கேரி பைகள், கப்புகள் டன் கணக்கில் தயாரித்து குவித்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.