ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என மூன்று தொடரிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை (ஜன.21) தமிழ்நாடு வந்தடைகிறார் நடராஜன். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்று அதிக அளவில் நேசிக்கப்படும் நபராக வளர்ந்திருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.