சேலம்: எருமாபாளையம் அருகே உள்ள சன்னியாசி குண்டு பகுதியில் தயாளன் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இரண்டு உயர் ரக இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர்.
அப்பொழுது முதல் வாகனத்திற்கு ரூ.1,120 இரண்டாவது வாகனத்திற்கு ரூ.980 என இரண்டு வாகனங்களுக்கும் 2,100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். அப்பொழுது பெட்ரோல் பங்க் ஊழியர் சூர்யாவிடம் ரசீது வழங்கும்படி இளைஞர்கள் கேட்டுள்ளனர்.
பங்க் ஊழியர், ரசீதை திரும்பி நின்று எடுத்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் பணம் வழங்காமல் வாகனத்தை வேகமாக இயக்கி தப்பி ஓடினர். இது தொடர்பாக சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
புகார் அடிப்படையில் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு விவகாரம்: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது