ETV Bharat / state

தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்! - சேலம்

சேலம் : பெரியார் பல்கலைக் கழகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

periyar university workers protest
author img

By

Published : Oct 18, 2019, 3:25 PM IST

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளர்களை பணி நிரந்தர செய்யவேண்டும் என்றும் முறைகேடான பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டம் ஆதரவளித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பசுபதி கூறுகையில்," பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை, துணைவேந்தர் உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.

முன்னாள் பதிவாளர் தற்கொலைக் கடிதத்தில் உள்ளதை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி, அவரது தற்கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

மேலும் தற்போது உள்ள பதிவாளர் பெண் ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார் . அதைப் பற்றி துணைவேந்தரிடம் புகார் அளித்தால் அவர் உதாசீனப் படுத்துகிறார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை துணைவேந்தர் நிறுத்திக்கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:

பயணிகள் ரயிலில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் மீட்பு

Intro:பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:பல்கலைக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தமிழ்நாடு ஆளுனரிடம் நேரில் சென்று புகார் அளிப்போம் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தர படுத்தவேண்டும் என்றும் முறைகேடான பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக பெரியார் பல்கலை கழக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . ஆர்ப்பாட்டம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி கூறுகையில்," பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை துணைவேந்தர் உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.

முன்னாள் பதிவாளர் தற்கொலை கடிதத்தில் உள்ளதை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி அவரது தற்கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் .

இதை நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும். மேலும் தற்போது உள்ள பதிவாளர் பெண் ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார் .

அதை பற்றி துணைவேந்தரிடம் புகார் அளித்தால் அவர் உதாசீனப் படுத்துகிறார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை துணைவேந்தர் நிறுத்திக்கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Conclusion:இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்கள் பிரதிநிதிகள் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.