ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன் - PERARIVALAN

ராஜிவ் காந்தி வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளனும் அவரது தாயாரும், சேலத்தில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரை சந்தித்தனர்.

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள்

author img

By

Published : May 21, 2022, 11:23 AM IST

Updated : May 21, 2022, 1:57 PM IST

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் இருவரும் நேற்று (மே 20) வருகை தந்தனர். அப்போது மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்தனர். இதையடுத்து, சேலம் தனியார் ஹோட்டலில் பேரறிவாளனும், அவரது தாயாரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன்

இந்த சந்திப்பின்போது உடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சாமானியர்களின் குரல் எடுபடாது என்ற நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தன் மகனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி சுதந்திர மனிதனாய் அவர் வலம் வருவார். சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடுகின்றனர், அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக அமையும்.

உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். பேரறிவாளன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம். அதற்கான, பெண் தேடல் இனி நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேரறிவாளன் பேசியதாவது, "தமிழ்நாடு அரசு எங்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது. மாநில அமைச்சரவையின் முடிவு இறுதியானது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது" என்றார்.

இதையும் படிங்க: 'இவர் ஆடுவாரா.?, இல்ல ஆட்டிவைப்பாரா..?' : மாஸ் காட்டும் 'லெஜண்ட்' அண்ணாச்சி

Last Updated : May 21, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.