ETV Bharat / state

மாற்று இடம் வழங்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - salem collector office

சேலம்: அயோத்திபட்டனம் கோதண்டராமன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வசித்துவரும் மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை
author img

By

Published : May 20, 2019, 9:02 PM IST

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனத்தில் போயர் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கோதண்டராமன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முப்பாட்டன் காலத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து காலி செய்யும்படி அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது தற்போது தங்கியுள்ள இடத்திலேயே மாத வாடகைக்கு வீடுகள் வழங்கக் கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

அதைத் தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதனப்படுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உதவினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இப்போராட்டத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.