ETV Bharat / state

இயற்கை உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!

சேலம்: இயற்கை உரம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்த மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

author img

By

Published : Dec 4, 2019, 11:57 AM IST

சேலம் மாநகராட்சி 3ஆவது டிவிஷன் எருமாபாளையம் அருகே உள்ள மலையடிவாரத்தில், மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இன்று காலை அலுவலர்கள் சிபி சக்கரவர்த்தி, பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்டோர் அங்கு சென்று நிலத்தை அளந்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் திரளாக வந்து நிலங்களை அளக்கக்கூடாது. இப்பகுதியில் உரம் தயாரித்தால், மாநகராட்சி லாரிகள் வந்து செல்லும். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தவேல் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

பின்னர், பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்களை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு, முட்புதர்களை அகற்றுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்த பொக்லைன் எந்திரத்தையும், அப்பகுதி இளைஞர்கள் திரளாக வந்து வெளியேறச் செய்தனர்.

இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று இளைஞர்களை சமாதானப்படுத்தினர். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர செய்வதறியாமல் திகைத்த மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் சென்று சேலம் மாநகராட்சியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்று உரம் தயாரிக்கப்பட்டு அதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், எந்தப் பகுதியிலும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஆதாரங்களுடன் தெரிவித்தனர். உரம் தயாரிப்பால் இப்பகுதி மக்களுக்கும் நிலத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: இயற்கையை மீட்கும் நோக்கில் விதைப்பந்துகளை உருவாக்கிய மாணவர்கள்!

Intro:சேலத்தில் இயற்கை உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.Body:

சேலம் மாநகராட்சி 3-வது டிவிஷனில் உள்ளது நகர மலை அடிவாரம் .
இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இதற்காக இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சிபி சக்கரவர்த்தி மற்றும் பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளக்க அங்கு சென்றனர்.பின்னர் நிலத்தை அளந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளா அங்கு வந்து நிலங்களை அளக்கக்கூடாது. இந்தப்பகுதியில் உரம் தயாரித்தால் மாநகராட்சி லாரிகள் வந்து செல்லும். இதனால் விபத்து ஏற்படும்.
இதுதவிர நிலத்தடி நீரும் பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு அழகாபுரம் காவல்நிலைய
ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் .
பிறகு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் நிலம் அளக்கும் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
இந்த நிலையில் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முட்புதர்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர் .

இதை அறிந்த இளைஞர்கள் அங்கு திரளாக வந்து பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரை மிரட்டி அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தை வெளியேறச் செய்தனர்.
இதை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து இளைஞர்களை சமாதானப்படுத்தினர்.

பிறகு மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் சென்று சேலம் மாநகராட்சி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் உரம் தயாரிக்கப்பட்டு உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியிலும் நிலத்தடி நீர் கெடவில்லை என தெரிவித்து சமாதானப்படுத்தினர்.
பிறகு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.