ETV Bharat / state

சேலத்தில் அரசு மருத்துவமனையில் பெயிண்டர் படுகொலை

மேட்டூர் அரசு மருத்துவமனையில் பெயிண்டரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை

author img

By

Published : Oct 25, 2022, 10:48 AM IST

சேலம்: மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ரகு (28). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடயே ரகுவுக்கும், தொட்டில்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன், தெர்மல் நான்கு ரோட்டைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரும், நேற்று (அக் 24) இரவு ரகுவை கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரகு, சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த வெள்ளையன், மூர்த்தி மற்றும் பிரகாஷ் ஆகியோர் கத்தியால் ரகுவை சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தனர்.

இதனைக் கண்ட அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அலறியடித்து ஓடினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை "அந்த வார்த்தையை" சொல்லி அழைத்த இளைஞருக்கு 18 மாதங்கள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.