கரோனோ நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை முழுமையாக பின்பற்றி பொதுமக்கள் தங்களை கரோனோ வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள இந்த நிலையில் , இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் ஆகியவற்றில் ஊர் சுற்றிய 1500 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கரோனோ நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது இடங்களில் பொதுமக்கள் நடமாடக்கூடாது என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும் என்றும் சேலம் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சாக்கு சொல்லி ஊர் சுற்றுவோரை கையாள புது யுக்தியை கைக்கொண்டிருக்கும் நாமக்கல் காவல்துறை!