ETV Bharat / state

சேலத்தில் கணித ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தொடங்கியது! - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும்  கணித ஆசிரியர்கள்

சேலம்: உத்தமசோழபுரத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும்  கணித ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சி தொடங்கியது.

online training
online training
author img

By

Published : Dec 19, 2020, 9:22 PM IST

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் கணித ஆசிரியர்களுக்கான (Training On Integration of ICT Tools with Energized lesson plans for Math Teachers) இணையவழி பயிற்சி இன்று (டிச.19) தொடங்கியது.

பாடத்திட்டத்துடன் எவ்வாறு தகவல் தொழில் நுட்ப கருவியை இணைத்து கற்பிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு இப்பயிற்சி இணைய வழியாக தொடங்கப்பட்டது. கணித பாடத்தில் வடிவியல் என்ற தலைப்பில் ஆா்.இளவரசன் மற்றும் சிவராமகிருச்சகன் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப கருவியை இணைத்து பாடத்தை எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை விளக்கினர்.

இந்த இணையவழி பயிற்சியில் 20 தகவல் தொழில் நுட்பக் கருவிகளை பாடத்திட்டத்துடன் இணைத்து மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எளிமையாக செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் தமிழ்நாட்டில் உள்ள கணிதம் கற்பிக்கும் 155 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கணித ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சி
கணித ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சி

இதனை முனைவர் விஜயலட்சுமி சங்கர் முதுநிலை விரிவுரையாளர் ஒருங்கிணைத்தார். இப்பயிற்சியை சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் முனைவர் பி.கோவிந்தபிரகாஸ் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர், அதிமுக அமைச்சரை அவதூறாகப் பேசிய திமுக பிரமுகர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.