ETV Bharat / state

அறுவைச் சிகிச்சையில் கவனக்குறைவு: தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! - edapadi appendix hospitals

சேலம்: அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனையை பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

one lady's relations sieged private hospital for wrong surgery
author img

By

Published : Nov 2, 2019, 9:15 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே எல்லகுட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி நவமணி. இவருக்கு கடந்த திங்கட்கிழமையன்று எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவைச் சிகிச்சை நடந்த அடுத்த நாள் நவமணியின் உடல்நிலை மோசமடைந்து மூச்சதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடலில் ஓட்டை விழுந்ததன் காரணமாக, நவமணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் குடல் ஒட்டையை சரிசெய்யும் மருத்துவ வசதி அங்கில்லாததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். சேலம் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நவமணியை அவரது உறவினர்கள் சிகிக்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளார்.

மருத்துவமனையை முற்றுகையிட்ட நவமணியின் உறவினர்கள்

இதனால் ஆத்திரமடைந்த நவமணியின் உறவினர்கள் தவறான சிகிச்சையளித்த எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து நவமணியின் கணவர் ராஜா கூறுகையில், " விவசாயியான நான் எனது மனைவியின் சிகிச்சைக்காக ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். இதனால் பலசிரமங்களை சந்தித்து வருகிறேன். இதுபோன்ற ஒருசில தனியார் மருத்துவமனைகள் செய்யும் தவறால் என்னை போன்ற பல அப்பாவிகள் பாதிக்கப்படுகிறோம். வருங்காலங்களில் இதுபோல் நடக்காமலிருக்க தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்'

Intro:சேலம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மருத்துவர் கவனக்குறைவாக, பெண் ஒருவருக்கு வயிற்றில் அறுவை சிகிக்சை செய்ததால் , பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Body:சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள
எல்லகுட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. அவரின் மனைவி நவமணி.

நவமணிக்கு கடந்த திங்கள் கிழமை அன்று எடப்பாடி அரவிந்த் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், டாக்டர் கண்ணனிடம் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

மறுநாள் மாலை நவமணியின் உடல் நிலை மோசம் அடைத்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதன் கிழமை, மருத்துவர் கண்ணன் சேலத்தில் உள்ள கோகுலம் மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார் .

மேலும் அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து உடனே ஸ்கேன் செய்து பார்த்ததில் குடல் ஓட்டை விழுந்ததன் காரணமாக நவமணிக்கு மூச்சு திணறல் ஏற்ப்பட்டது என்றும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்
மேல் சிகிக்சை காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்க பட்டு
அங்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நவமணி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார் .

இது தொடர்பாக பேட்டியளித்த நவமணி கணவர் ராஜா," மனைவிக்காக ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து உள்ளேன் .

விவசாயம் செய்யும் நான் மிகவும் கஷ்ட பட்டு வருகிறேன்.

மேலும் இது போன்ற தவறுகள் வருங்காலகட்டதில் நடக்காமல் இருக்க அந்த மருத்துவ மனையின் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் " தெரிவித்தனர்Conclusion: தனியார் மருத்துவமனை நிர்வாகம் நவமணிக்கு நேர்ந்த நிலை குறித்து கவலைப்படாமலும் இதற்கு காரணமான மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் அதிர்ச்சியடைந்த நவமணியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.