சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 நபர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்கள் என மொத்தம் 41 பேர் கரோனா சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், 34 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது குணமடைந்து பெண் ஒருவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே. பாலாஜிநாதன் வழியனுப்பி வைத்தார். மேலும், அந்தப் பெண்ணுக்கு நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் அடங்கிய பெட்டகம் வழங்கி, அடுத்த 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வது குறித்தும், பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் குறித்தும் மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
அந்தப் பெண்ணை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பி.வி.தனபால் உள்பட மருந்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்கிய ஆணையர்!