சேலம்: கேரள மாநிலத்தில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரையிலான 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
ஓணம் பண்டிகையின்போது ஒவ்வொரு வீட்டிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, பல வண்ண மலர்களால் ஆன அத்தப்பூ கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள கேரள சமாஜம் நாயர் சேவா சமூகத்தினர் சார்பில் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டது. அப்போது பெண்கள் பாடல்கள் பாடி, நடனமாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய ஊஞ்சலில் ஆடி ஓணம் கொண்டாடிய சசி தரூர் எம்பி!