ETV Bharat / state

பெரியார் பல்கலை துணைவேந்தர் விவகாரம்; உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூட்டமைப்பு முடிவு!

Periyar University VC: மேலிடத்தின் நிர்ப்பந்தத்தாலேயே துணைவேந்தர் கைது செய்யப்பட்டார் எனவும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளனர்.

SFRBC அமைப்பினர் குற்றச்சாட்டு
விதிகளை மீறி பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது செய்யப்பட்டார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:46 PM IST

விதிகளை மீறி பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது செய்யப்பட்டார்

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் 'பூட்டர்' அறக்கட்டளை அமைத்த முறைகேடு புகாரில், சட்ட விதிகளை கடைபிடிக்காமல் மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் துணைவேந்தர் கைது செய்யப்பட்டார் என, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சட்ட விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியதோடு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த புகாரில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், உள்நோக்கத்துடன் சட்ட விதிகளை மீறி மேலிடத்தின் நிர்பந்தத்தின் காரணமாக பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி கூறுகையில், “பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து ஒரு மூத்த வழக்கறிஞர், முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தக் குழு, பலரை விசாரணை செய்து ஆவணங்களை சேகரித்ததில், துணைவேந்தர் ஜெகநாதன் மீது மேல் மட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளின் தூண்டுதலால்தான் புகார்தாரர் தன்னை சமுதாய பெயரால் திட்டி அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும், மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் சட்ட விதிகளை கடைபிடிக்காமல் உள்ளூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பூட்டர் பவுண்டேஷன் லாப நோக்கு இல்லாத நிறுவனம். இதுவரை இந்த நிறுவனத்தில் எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. இதனால், துணைவேந்தர் மீதான உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன்; விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.