கரோனாவால் பாதிக்கப்பட்ட சேலம் மற்றும் வெளிமாநிலங்களைச்சேர்ந்த 198 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று ஓமலூர், ஏத்தாப்பூர் காமலாபுரம், ஆத்தூர், கிச்சிபாளையம் உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்த 12 நபர்கள் சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் நிர்மல்சன் ஆகியோர் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவத்துறையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த சேலத்தைச் சேர்ந்த நிவேதா, மருத்துவர்களிடம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது நிவேதா பேசியதாவது, "நாங்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இடம் முழுவதும் அசுத்தம் நிறைந்து, சுத்தம் இன்றி காணப்பட்டது.
இதனை நாங்கள் பலமுறை செவிலியரிடம் கூறியும் சுத்தம் செய்து தரவுமில்லை; தூய்மைப் பணியாளர்களும் உள்ளே வரவில்லை.
மேலும் அங்குள்ள 3 கழிப்பறைகளில் ஒரு கழிப்பறை மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக அளவில் வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோல சிகிச்சைப் பெற்றுவரும் அறைகள் பத்து நாட்களாகியும் தூய்மைப்படுத்தப்படவில்லை.
'கரோனா பயம் தரவில்லை; அரசு மருத்துவமனையின் சுகாதாரம் பயம் தருகிறது' - மீண்டவரின் அனுபவம்! - 'கரோனாவைப் பார்த்து பயமில்லை' - மீண்டவரின் அனுபவம்
சேலம்: கரோனாவை விட அரசு மருத்துவமனையின் சுகாதாரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று கரோனாவிலிருந்து மீண்டவர், தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.