கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீது மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் துறை வாகன ஓட்டிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நான்கு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வாகனங்களில் வெளியே வரமுடியும்.
ஒவ்வொரு முறையும் வாகனங்கள் வெளியே வரும்போது வண்டியின் பதிவு எண் குறித்து வைக்கப்படும். அந்த வாகனத்திற்கு பெயிண்ட் மூலம் அடையாளக் குறியிடப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் பெயிண்ட் மூலம் குறியிடப்படுகிறது. நான்கு நாள்களுக்கு நான்கு வண்ணங்களில் அடையாள குறியிடப்படுகிறது. அதே வாகனம் மறுபடியும் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கட்டுப்பாடு வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'முடங்கிய நாடு, சுருங்கிய வயிறு'- பாலியல் தொழிலாளர்களின் கண்ணீர் கதை!