ETV Bharat / state

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் - கள் இயக்கம் குற்றச்சாட்டு

author img

By

Published : Oct 6, 2021, 7:27 PM IST

நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் அதிக அளவில் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

சேலம்: மாவட்டத்தில் கள் இயக்கம் சார்பில் இன்று (அக்.6) கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக நெல் கொள்முதல் செய்யமுடியாத நிலை உள்ளது. தனியாரிடம் நெல் விற்பனை செய்தால், அரசின் விலையில் பாதிதான் கிடைக்கிறது.

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்

அதுமட்டுமல்லாமல், நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் அதிக அளவில் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்றால், அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு சிதைந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சுத்தமான ஜவ்வரிசி வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது. ஆனால் பெரும்பாலான ஆலைகள் ஜவ்வரிசியை வெண்மையாக்க அதில் மக்காச்சோள மாவு, சேரன் அரிசி மாவு உள்ளிட்டவற்றை கலக்கின்றனர்.

இது உடலுக்கு கேடு ஏற்படுத்துவதால் இந்தியா முழுவதும் ஜவ்வரிசி நுகர்வு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இதனை தடுக்கவில்லை என்றால் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்களிக்க அனுமதி மறுப்பு - பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.