ETV Bharat / state

படுகொலைகள் தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன - முத்தரசன்

சேலம்: தமிழ்நாடு அன்றாடம் படுகொலைகள் நடைபெறும் இடமாக மாறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

முத்தரசன்
author img

By

Published : Jul 30, 2019, 5:07 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வேலு தங்கமணி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுவந்தார். வனவாசி பகுதியில் துணிக்கடை நடத்திவந்த இவரை கடந்த 16ஆம் தேதி இருவர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலு தங்க மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலு தங்கமணியை வெட்டிய குற்றவாளிகள் தாங்களாகவே சரண் அடைந்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என இதுவரையில் காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை ஒரு முதலமைச்சரின் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது" என்றார் .

உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முத்தரசன்

மேலும், "தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் படுகொலைச் சம்பவங்கள் ஒரு அன்றாட நிகழ்வாக இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர்களும் முதலமைச்சரும் பொறுப்பில்லாமல் பதில் கூறுகின்றனர்" என்றும் அவர் கூறினார்.

Intro:தமிழகத்தில் நடைபெறும் படுகொலை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சரின் பேச்சு பொறுப்பற்ற தாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Body:சேலம் மாவட்டம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வேலு தங்கமணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார் இவர் வனவாசி பகுதியில் துணி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு துணிக்கடையை முடிகின்ற நேரத்தில் கடைக்குள் நுழைந்த இருவர் தங்கமணியை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். உடல் முழுவதும் சுமார் 27 இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் அழைத்துவந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் கடந்தவாரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மோசமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலூர் தங்க மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த வேலு தங்கமணியின் உடலுக்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலு தங்கமணி வெட்டிய குற்றவாளிகள் தாங்களாகவே சரண் அடைந்தனர். இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் எத்தனை பேர் உள்ளனர் என இதுவரையில் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை முயற்சிகளை செய்து கொண்டிருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறோம் விவரங்களை சேகரித்து கொண்டே இருக்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர காவல்துறை எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த மிக மோசமான கொடூர கொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்தார் முத்தரசன் ஒரு முதலமைச்சர் உடைய தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட மிக மிக கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றார்.

வேலு தங்கமணி கொலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் எந்த எந்த பின்னணி இருந்தாலும் அவரை கைது செய்யப்பட வேண்டும் காவல்துறை நினைத்தால் நொடிப்பொழுதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் நவீனமான காலத்தில் இருக்கிறார் அந்தக் கொலை செய்யப்பட்ட அந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது அதில் பதிவாகி இருக்கிறது யார் என்று அடையாளம் தெரிகிறது இவ்வளவும் தெரிந்தும் காவல்துறை அதன் மீது கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் அதன் பின்னால் ஏதோ ஒருவர் இயக்குவதாக பொருள் என தெரிவித்தார்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் படுகொலைச் சம்பவங்கள் ஒரு அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது யாருடைய உயிருக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை இதற்கு அமைச்சர்களும் முதலமைச்சரும் பொறுப்பில்லாமல் பதில் கூறுகின்றனர். இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறுவதற்கு பதிலாக ஆதரவளிக்கக் கூடிய முறையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கிறார் மிகவும் மோசமான நிலைமை வேறு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு இதுபோன்ற நிலை ஏற்படுவது இல்லை எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

பேட்டி : முத்தரசன் இந்திய ,கம்யூனிஸ்ட் கட்சி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.