சேலத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் வருகின்ற 4ஆம் தேதி இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இதுவரை 100 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (ஜன.4) சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தயாநிதி மாறன் இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அப்போது பொதுமக்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவார்" என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் தயாநிதி மாறன் சேலம் வந்திருந்த போது பாமகவினர் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி