ETV Bharat / state

‘திமுக முன்னாள் அமைச்சரின் மரணத்திற்கு ஸ்டாலின் காரணம்’ - பாமக நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு - mk stalin against pmk

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என்று பாமக மாநில நிர்வாகி அருள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

pmk arul
author img

By

Published : Oct 11, 2019, 4:12 PM IST

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் வன்னியர் சமுதாயத்தை சேர்த்து அந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்றும், அடுத்து திமுக ஆட்சி அமைத்தால் வன்னியர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு திமுகதான் இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் வன்னியர் சமுதாய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். வன்னியர்களுக்கு ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் மட்டும்தான், வேறு யாரும் இல்லை.

ஸ்டாலின் மீது பகீர் குற்றச்சாட்டு

திமுகவைப் பாராட்டி சேலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது என்பது அவர்களே செலவு செய்து ஒட்டிக் கொண்டது. வன்னியர்கள் யாரும் ஒட்டவில்லை. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவில் மர்மம் உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த மன உளைச்சல்தான் அவரது மரணத்துக்கு காரணம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் பாமக சார்பில் மனு அளிக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக பாமக தலைவர்களுக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வார்த்தைப்போர் நிலவிவரும் நிலையில், பாமக மாநில நிர்வாகியின் ஸ்டாலின் மீதான இந்த குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு’ - ஸ்டாலின் உறுதி

Intro:முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு காரணம் தற்போதைய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொடுத்த மன உளைச்சலே என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் கூறுகையில்," விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் வன்னியர் சமுதாய தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்து வருகிறார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வன்னியர்களுக்கு ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் மட்டும்தான்.

வேறு யாரும் இல்லை . திமுகவை பாராட்டி சேலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது என்பது அவர்களே செலவு செய்து ஒட்டிக் கொண்டது தான் . வன்னியர்கள் யாரும் ஓட்டவில்லை.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவில் மர்மம் உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொடுத்த மன உளைச்சல் தான் காரணம்.

எனவே அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் பாமக சார்பில் மனு அளிக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த நிலையில் நேற்று முன்தினம் விக்கிரவாண்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்னிய சமுதாயம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார் . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் அருள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.