ETV Bharat / state

’ஓரிரு நாள்களில் உருக்காலை கரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும்’ - செந்தில் பாலாஜி - salem latest news

சேலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சென்ற 20ஆம் தேதி உருக்காலை வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையம், இன்னும் ஓரிரு நாள்களில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

author img

By

Published : May 25, 2021, 6:56 PM IST

சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கெளதம சிகாமணி, சின்ராஜ், சுகாதாரம், வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுக்க 177 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவும் விதம் குறித்து கண்காணிப்பு அலுவலர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அதேபோல் 20 ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

’ஓரிரு நாள்களில் உருக்காலை கரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும்’ - செந்தில் பாலாஜி

மக்கள் தொகை அதிகமுள்ள தம்மம்பட்டி உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளையும் கண்காணிக்க, தனி கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம், தற்போது ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உருக்காலை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வரும். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து கட்டண விவரம் குறித்த பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனை முன்பாகவும் வைக்கப்படவுள்ளது. தனியார் மருத்துவமனை சிகிச்சையில் குளறுபடி நடந்தால் பொதுமக்கள் எளிதாக தமிழ்நாடு அரசிடம் புகார் தெரிவிக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க : பிறந்தநாள் வாழ்த்துகள் ‘கவுன்டர் கிங்’ கவுண்டமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.