ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக - எல். முருகன் - பாஜக

தமிழ்நாட்டில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக செயல்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் எல்.முருகன்
அமைச்சர் எல்.முருகன்
author img

By

Published : Aug 19, 2021, 6:33 AM IST

சேலம்: கோவையில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மக்கள் ஆசி யாத்திரையைத் தொடங்கினார். இந்த நிகழ்வானது மூன்று நாள்களுக்குப் பின்னர், நேற்று (ஆகஸ்ட் 18) சேலத்தில் நிறைவுபெற்றது.

அப்போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அரசியல் பின்னணி ஏதும் இல்லாத, மிகவும் எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட முதல் தலைமுறை அரசியல்வாதிகளான 43 பேருக்கு பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார்.

நிகழ்ச்சி மேடையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுவது தொடர்பான காணொலி

கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை

எங்களை நாடாளுன்றத்தில் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதிசெய்து தடுத்துவிட்டன. இதனையடுத்தே மக்களை நேரடியாக அமைச்சர்கள் சந்திக்கும் வகையில், நாடு முழுவதும் மக்கள் ஆசி யாத்திரை நடத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் நலத்திட்டங்களால் நேரடியாகப் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்திக்கும் வகையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆசி யாத்திரையானது நிறைவடைந்துள்ளது. மூன்று நாள்களில் ஆறு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை 169 நிகழ்வுகளில் சந்தித்துள்ளோம். சுமார் 326 கிலோமீட்டர் தூரம் பயணித்து நடத்தப்பட்ட யாத்திரையில், மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாட்டில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடற்பாசி பூங்கா அமைக்க நடவடிக்கை

மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு அதிகப் பயனாளர்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. நாட்டிலேயே தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ராணுவத் தளவாட உதிரிபாக தொழில் வழித்தடம் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கோவை, திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும்.

தமிழ்நாட்டில் கடந்த நிதிநிலை அறிக்கையின்போது நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மீன்வளத் துறை சார்பில் சிறப்புப் பொருளாதார கடற்பாசி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய அமைச்சர் எல்.முருகன்
விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

சென்னையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் கால்நடைத் துறை மூலம் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியை மேம்படுத்த 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு ரூ. 3 மட்டுமே குறைப்பு

தமிழ்நாட்டுக்கு, மத்திய அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவம் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்துள்ளது. மீனவர் பிரச்சினை வரும்போது, இலங்கை அரசுடன் பேசி தீர்வு காணப்பட்டுவருகிறது.

மத்திய அரசு மீனவர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மீனவர் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும். கடந்த காலங்களில் இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை மீட்டுள்ளோம்.

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல டீசல் விலை குறைக்கப்படவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியைச் செயல்படுத்துவதற்கான விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மேலும், கல்விக்கடன், பயிர்க்கடன் குறித்தும் அறிவிப்பு இல்லை. மொத்தத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் நாளை சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.