சேலம்: சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முள்ளுவாடி கேட் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வருவது குறித்து மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்த உத்தரவு
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கும் வகையில், பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'நிர்பயா திட்டம்: பேருந்துகளில் சிசிடிவி கேமரா' - ராஜகண்ணப்பன்