ETV Bharat / state

நதிநீர்: அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட இயற்கையின் கொடை - வறட்சி

அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய இயற்கையின் கொடையான நதிநீருக்காக, மாநிலங்களிடையே நிலவும் விரோத பாங்கு குறித்த ஈநாடு பத்திரிகை தலையங்கத்தின் தமிழாக்கத்தைக் காணலாம்.

Mettur dam water level down
மேட்டூர் அணையிலிருந்து 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:47 PM IST

Updated : Oct 9, 2023, 4:06 PM IST

ஐதராபாத்: பல்லாண்டு பழமையான காவிரி நதிநீர் பிரச்சனை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பரஸ்பர நம்பிக்கை மறையத் துவங்கி, தண்ணீர் பற்றவைத்த போராட்ட நெருப்பு இரு மாநிலங்களுக்கிடையே பரபரப்பை பற்ற வைத்துள்ளது. காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய தீர்ப்பில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முடிவானது கர்நாடக அரசாலும், கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற அமைப்பாலும் பெரும் எதிர்ப்பை எதிர் கொண்டு, இடையூறு ஏற்படுத்தக் கூடிய பெங்களூரு பந்தை விளைவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து செல்லக் கூடிய பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே முடிவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பாசனத்திற்கான நீர்த்தேவைக்காக நீர்த்திறப்பை அதிகரிக்கக் கோரி முறையிடப்பட்டது. ஆனாலும் நீர்த் தேக்கங்களில் குறைவான நீர் இருப்பை காரணம் காட்டி அத்தகைய நடவடிக்கை சாத்தியமற்றது என கர்நாடகா மறுப்பு தெரிவித்தது.

இது உச்சநீதிமன்றத்தில் முறையீட்டுக்கு சென்ற நிலையில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு காவிரி நதிநீர் மேலாண்மை (CWMA) ஆணையத்தின் முடிவில் தலையிட மறுத்தது, போராட்டத்திற்கான களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. கர்நாடகாவில் காவிரி படுகை விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் பரவலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தருணத்தில் நெடுங்கால பிரச்சனையின் வரலாற்றை மறுபரிசீலனை செய்வது அவசியம். 2007ம் ஆண்டில் நதிநீர் பங்கேடு தொடர்பாக 2007ம் ஆண்டு சிறப்பு தீர்ப்பாயம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன் பின்னணியில் நடைபெற்ற சட்ட போராட்டங்களுக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய நீரின் அளவை உறுதியாக வரையறுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது மற்றும் அதற்கான பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கிணங்க செயல்படும் நிலையில் இல்லை. குறிப்பாக பருவமழை மோசமடையும் போது, நிலைமை இன்னும் தீவிரமடைகிறது.

கர்நாடகாவில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டத்தின் இடையே புதிய உத்தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 15 வரையிலும் 3 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் கர்நாடகாவிலிருந்து, தமிழ்நாடு நோக்கி திறந்து விடப்படுகிறது. இதனிடையே கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் பதற்றம் தணிய வேண்டும்.

இருமாநில சமரசகத்தை சீர்குலைக்கும், ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் பதற்றத்தை தணிக்க முடியுமா?. பொதுவாகவே நதிகள் மாநில எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமான பொக்கிஷங்கள். இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்ப்பாதைகள் மீதான உரிமை குறித்து அரசுகளிடையே நடைபெறும் மோதல்கள் தேவையற்ற நெருக்கடிகளை தூண்டி விடுகின்றன. குறுகிய மனப்பாங்கு கொண்ட அரசியல் அபாயகரமான எதிர்காலத்தை தோலுரித்து காட்டுகறிது. ஆனால் எந்த விதத்திலும் விவசாயிகளின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் உள்ளூர் நலனுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். தண்ணீர் என்பது உலகம் முழுவதும் இயற்கை நமக்கு கொடுத்துள்ள பாரபட்சமற்ற, விலை மதிப்பற்ற இயற்கையின் கொடை. கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ள மீகாங் நதிநீரை திறம்பட கையாளுகின்றன.

பல பத்தாண்டுகளாக நைல் நதி படுகையில் நாடுகளிடையே ஒருமித்த கருத்துடன் நீர் பங்கீடு செய்யப்படுகிறது. மாறாக மாநிலங்களின் கூட்டமைப்பான இந்தியாவில், அப்பட்டமான தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது. கூட்டுறவே கூட்டாட்சியின் அடிப்படை சாராம்பசம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகா தொடர்ந்து மீறுகிறது.

இந்த தீர்ப்பின் படி நதிக்கரையோர மாநிலங்கள் அனைத்து கால கட்டங்களிலும், தங்களுக்கிடையே நீர் பங்கீட்டை கட்டாயமாக்குகிறது. ஆனால் வறட்சி இதில் முரண்பாட்டுக்கு வித்திடுகிறது. எந்த காலத்திலும் மேல்கரையில் இருக்கும் மாநிலங்கள் மேட்டிமை மனப்பாங்கு கொள்ளக் கூடாது. வறட்சியின் இழப்பு கீழே வடிநிலமாக இருக்கும் மாநிலங்கள் மீது சுமத்தப்படக் கூடாது.

எந்த மாநிலமும் தங்கள் எல்லையில் ஓடும் நதிநீர் மீது முழுமையான அதிகாரத்தை கைப்பற்ற முயலக்கூடாது, நல்லிணக்கம் என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும். நதிநீர் பங்கீட்டில் தற்போதுள்ள அமைப்புகளின் போதாமையை உணர்ந்துள்ள உச்சநீதிமன்றம் தன்னிச்சசையான அமைப்பின் தேவையை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

இது போன்ற பாரபட்சமுள்ள அமைப்புகளின் குறைபாடுகளை களைய, கற்றறிந்த நபர்களை பாராளுமன்றம் மூலமாக நியமிக்க வேண்டும். இந்த அமைப்பின் பரிந்துரைகளானது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இத்தகைய சீரான நடவடிக்கைகளின் மூலமாகத்தான், மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகள் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் சின்னங்களாக அமையும்.

இதையும் படிங்க: சிக்கிமில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 23 ராணுவ வீரர்கள் மாயம்!

Last Updated : Oct 9, 2023, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.