ETV Bharat / state

'பக்கத்து வீட்டுக்காரரைத் தாக்குவதற்குப் பறந்துவந்த இளைஞர்' - salem

சேலம்: பக்கத்து வீட்டுக்காரரைத் தாக்குவதற்காக இளைஞர் ஒருவர் விமான ஏறி சேலம் வந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

flight
author img

By

Published : Jun 2, 2019, 10:29 AM IST

ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (44). இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் மும்பையில் வசித்துவருகிறார். இவர் அங்கு ஓட்டுநர் பணியாற்றிவருகிறார்.

அண்மையில், முருகேஷ் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு தனது குடும்பத்துடன் குடியேறுவதற்காக புதியதாக வீடுகட்டி வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் இன்பம், கிருஷ்ணன், வரதன், கோமதி ஆகியோர் அவ்வப்பொழுது முருகேஷிடம் தகராறு செய்துவந்தனர். இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் வாய்த் தகராறு முற்றியது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கோமதி, மும்பையில் வேலைபார்க்கும் தன் மகன் மணியரசனை வரவழைத்து முருகேஷை தாக்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, மும்பையிலிருந்து மணியரசன் இரவோடு இரவாக விமானம் மூலம் அமரகுந்திக்கு வந்துள்ளார். வந்த வேகத்திலேயே, மணியரசன் முருகேஷை மரக்கட்டையால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அவரைத் தடுத்த அவரது மனைவி, பிள்ளைகளையும் மணியரசன் தாக்கியுள்ளார்.

பத்துவீட்டுக்காரரைத் தாக்குவதற்குப் பறந்துவந்த இளைஞர்

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த முருகேஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தொளசம்பட்டி காவல் துறையினரிடம் முருகேஷ் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மணியரசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டுகாரரை அடிக்க விமானம் ஏறி வந்த இளைஞர் கைது

சேலம் (01-06-2019): பக்கத்து வீட்டுக்காரரை அடிப்பதற்கென்றே இரவோடு இரவாக மும்பையிலிருந்து விமானம் மூலம் வந்து தாக்கிய இளைஞரை தொளசம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி கிராமத்தில் கர்ணன் மகன் முருகேஷ் (44) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் ஓட்டுனர் வேலை செய்து வருகிறார்.

இவர் மும்பையில் இருந்து அண்மையில்,  தன்னுடைய சொந்த ஊரான ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தி வந்தார். அங்கு தனது குடும்பத்துடன் குடியேருவதற்காக புதியதாக வீடுகட்டி வருகிறார். 

இந்தநிலையில் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் இன்பம்,கிருஷ்ணன்,வரதன் மற்றும் கோமதி ஆகியோர், அவ்வப்பொழுது முருகேஷிடம் தகராறு செய்து வந்தனர். 

இதைதொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் வாய்த் தகராறு முற்றியது.  

இதனையடுத்து மும்பையில் வேலை பார்க்கும் கோமதியின் மகன், மணியரசன் என்பவரை வரவழைத்து தாக்க திட்டம் தீட்டியுள்ளனர். 

அதன்படி மும்பையிலிருந்து மணியரசன் அவசர அவசரமாக இரவோடு இரவாக விமானம் மூலம் வந்துள்ளார்.

பின்னர் அமரகுந்தி வந்து  முருகேஷை மரக்கட்டையால் பயங்கரமாக தாக்கியுள்ளார் . அவரைத் தடுத்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் மணியரசன் கடுமையாகத் தாக்கியுள்ளார். 

இந்தக் கொலைவெறித்

தாக்குதலில் படுகாயமடைந்த முருகேஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி காவல்துறையினரிடம் முருகேஷ் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மணியரசன் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்பொழுது சிறைக்கு செல்லும்முன் தனக்கு நெஞ்சுவலி வலி என்று இளைஞர் நாடகமாடியதாக தெரிகிறது.தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இளைஞர் அனுமதிக்கப்பட்டார். 

பக்கத்து வீட்டுக்காரரை  தாக்குவதற்காகவே விமானம் மூலம் வந்து தாக்கிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.