ETV Bharat / state

பாலியல் தொல்லையால் சிறுமி உயிரிழப்பு: மாதர் சங்கம் போராட்டம் - பாலியல் தொல்லையால் சிறுமி உயிரிழப்பு

பாலியல் தொல்லையால் சிறுமி உயிரிழந்த நிலையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

மாதர் சங்கம் போராட்டம்
மாதர் சங்கம் போராட்டம்
author img

By

Published : Nov 17, 2022, 8:02 AM IST

சேலம்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 31.08.2022 அன்று பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்து சிலர் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சேலம் மாவட்டம் வீரகனூரில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின் ராமசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராணி, மணி உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையை கண்டித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமி உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஆக்கிரமிப்பை எடுத்தால் தலை இருக்காது' - விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.