இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “நீட் தேர்வால் எட்டு மாணவிகள் உயிரிழந்தனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நிலைகள் காணப்படுகின்றன.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிய கல்விக் கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு அரசு அதை செயல்படுத்தும் நோக்கில் தயாராக உள்ளது. சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளது.
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்றார். மேலும், துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், விரைவில் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'பெரியாரை விமர்சித்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர்' - கி. வீரமணி