சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கரும்பு உற்பத்தி குறைவினால் அம்மாவட்டத்தில் வெல்லம் உற்பத்தி செய்து வந்த விவசாயிகள், சிலர் தயாரிப்பினை நிறுத்தியதால் சேலத்தில் வெல்லம் வரத்து குறைந்து அதன் விற்பனையும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் பொங்கல் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 300 டன் அளவிற்கு விற்பனைக்கு வந்த வெல்லம், தற்போது 150 முதல் 200 டன் அளவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் 30 கிலோ மூட்டை வெல்லம் ஆயிரத்து 300 ரூபாயிலிருந்து ஆயிரத்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பொங்கல் பண்டிக்கை வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெல்லத்தின் விலையும் உயர்ந்துள்ளது. வெல்லம் உற்பத்தி குறைவினால் வரத்து குறைந்து வியாபாரமும் குறைந்துள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்க: சிறையில் கரும்பு அறுவடை செய்த சிறைவாசிகள்!