ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு! - Islamic Jamath people protest against caa in salem

சேலம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சேலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்  சேலம் மாவட்டச் செய்திகள்  caa protest salem  Islamic Jamath people protest against caa in salem  சேலம் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்பாட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்: 5ஆயிரம் பேர் பங்கேற்பு
author img

By

Published : Dec 24, 2019, 4:38 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் அச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று போராட்டம் நடத்திவருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஐக்கிய ஜமாத் மற்றும் ஜமா அத்துல் சபை, இமாம்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்வர் தலைமை வகித்தார். ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், இதில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டனர்.

தலைமை அஞ்சல் நிலையம், திருவள்ளூர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சூழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வெல்லும் - நடிகர் பார்த்திபன்!

Intro:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.

Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் தலைமை தபால் நிலையம் அருகே ஐக்கிய ஜமாத் சார்பாக முஸ்லிம்களின் அனைத்து அமைப்பினர் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC மற்றும் குடியுரிமை சட்டத் திருத்த சட்டம் CAA ஐ கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஐக்கிய ஜமாத்& ஜமா அத்துல் உலமா சபை, இமாம்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்வர் தலைமை வகித்தார். இதில் சுமார் 5 ஆயிரம் பெயர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் சுமார் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் தலைமை தபால் நிலையம், அகரகாரம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டங்கள் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.