ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு; உறவினர்கள் போராட்டம் - In Salem relatives protest against

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 27, 2022, 6:34 PM IST

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர், முருகன் மகன் கௌரி சங்கர்(25). விசைத்தறி தொழிலாளியான இவர், கடந்த 25ஆம் தேதி இரவு பணிக்கு செல்வதாகக் கூறி விட்டு, அருகில் உள்ள தறி பட்டறைக்குச் சென்றார். இந்நிலையில் அவர் அன்றுமுதல் வீடு திரும்பவில்லை.

மறுநாள் காலை அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கௌரி சங்கரின் உடல் சிதைந்த நிலையில் ஈரோடு ரயில்வே போலீஸாரால் மீட்கப்பட்டது. பின்னர் சடலம் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் சேலம் அரசு மருத்துவமனையில் கௌரி சங்கரின் உறவினர்கள் குவிந்தனர்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய உறவினர்கள், ஏற்கனவே கௌரி சங்கரின் குடும்பத்தினருக்கும் அவரது பெரியப்பா துரைசாமியின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கௌரி சங்கர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டதால், துரைசாமியின் குடும்பத்தினர் தான் கொலை செய்தனர் எனக்கூறி, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று (டிச.27) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இந்தச் சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.