சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்க்கொண்டுவருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 411 பேருக்கு கரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஒருவருக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஒன்பது பேர் சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கூறுகையில், "சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!