ETV Bharat / state

திருமணம் மீறிய உறவில் சிக்கல்; விஷம் குடித்த ஜோடி - suicide attempt

சேலத்தில் திருமணம் மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்சனையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த கணவன் மற்றும் அவரின் காதலியை மனைவி காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார்.

திருமணம் மீறிய உறவில் சிக்கல்; விஷம் குடித்த ஜோடி- கணவனை காப்பாற்றிய மனைவி

author img

By

Published : Oct 31, 2022, 7:43 AM IST

சேலம்: சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த ஓராண்டிற்கு முன் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்லமண்டியில் தர்மராஜ் வேலைபார்த்த போது அங்கு பணியாற்றி வந்த 20 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இந்த உறவு விவகாரம் இருவரது வீட்டிலும் தெரிந்து இருவரும் பேசக் கூடாது எனக் கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று தர்மராஜ் தனது மனைவி தமிழரசிக்கு போன் செய்து தான் ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள லாட்ஜில் காதலியுடன் வந்து விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்களுடன் ஏற்காட்டில் உள்ள விடுதிக்கு சென்று அவர்கள் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன்பின் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த ஏற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகாத பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தர்மராஜ் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆறு மாதத்திற்கு முன் இருவரையும் பிரித்து அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இருவரும் ஏற்காடு சென்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் வீட்டின் மாடி அருகே சென்ற மின்சாரக்கம்பியைப் பிடித்தவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.