தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. வாகன விபத்தினால் ஏற்படும் இழப்பைத் தடுக்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே முக்கிய நகரங்களில் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாட் ஸ்பாட் பைன் விதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட சாலைகளில் தேர்வு செய்து அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டும் நபர்களை அனுமதிக்காமல் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுரை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் சேலம் மாநகரில் இரண்டு முக்கியச் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அவ்வாறு அணியவில்லை என்றால் அப்பகுதி சாலையில் பயணிக்க முடியாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு முக்கியச் சாலைகளில் செல்லும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளனர்.
மேலும், சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள காவல்துறை கமிஷனர் அலுவலகம் பகுதியில் இருந்து திருச்சிக்குச் செல்லும் பெரியார் வளைவுப் பகுதியும், சேலம் சுந்தர் லாட்ஜ் சாலையிலும் என இரண்டு சாலைகளில் ஹெல்மெட் கண்டிப்பாக அணியும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இந்த இரண்டு பகுதிகளிலும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை போக்குவரத்துத்துறையினர் அனுமதிப்பதில்லை, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபரைப் பிடித்து காவல் துறையினர் அறிவுரை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: