தமிழ்நாடு அரசு சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் தங்களது சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தை இயக்கும் பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்தவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கப்பட்டு, ராமகிருஷ்ணா சாலை, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் நள்ளிரவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்!