சேலம்: வளிமண்டல சுழற்சி காரணமாக சேலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில் சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அண்ணாநகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் சூழ்ந்து நிற்பதால் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டில் வசிக்க முடியாத சூழல் இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் குடிநீர் தொட்டிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கலந்துள்ளதால், குடிநீர் கடைகளில் வாங்கி குடிப்பதாக கூறுகின்றனர். மேலும் வீட்டுக்குள் உள்ள மழைநீரை வெளியேற்ற முடியாமல் சிலர் உறவினர்கள் வீடுக்கு சென்று தங்கி இருக்கும் நிலையும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:போக்குவரத்து தொழிற்சங்கத்தின் ஊதிய உயர்வு குறித்த ஆறாம் கட்டப்பேச்சுவார்த்தை தொடங்கியது