ETV Bharat / state

ஏற்காட்டில் கன மழை: முறிந்த மரங்களால் நிறைந்த சாலை!

ஏற்காடு:தொடர்ந்து இரண்டு நாள்களாக பெய்த கனமழையினால் ஏற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் கடுமையானப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

ஏற்காட்டில் கன மழை: முறிந்த மரங்களால் நிறைந்த சாலை!
ஏற்காட்டில் கன மழை: முறிந்த மரங்களால் நிறைந்த சாலை!
author img

By

Published : May 29, 2020, 5:19 PM IST

சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக சேர்வராயன் மலைத்தொடரில் இரவு நேரத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. உச்சபட்ச அளவாக ஏற்காட்டில் 14 மில்லி மீட்டர் மழை அளவு நேற்று பதிவாகி இருந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால், சாலைகளில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மரங்கள் முறிந்து சாலையின் நடுவில் விழுந்து கிடப்பதால் கிராம மக்கள் வெளியே வர இயலாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்காட்டில் கன மழை

இதுகுறித்து கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கோபி கூறுகையில், 'ஒரு ஆண்டிற்கு முன்பாக அரங்கம் பகுதியிலிருந்து கோவிலூர் வரைக்கும் ஏழு கிலோமீட்டர் சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்ற சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதல்கட்டமாக சாலையின் மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணியைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம் என்ன காரணத்தினாலோ திடீரென்று சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டது.

இதனால், எங்கள் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழை சாலைகளை மோசமாக்கி வருகிறது. உடல் நிலை சரியில்லாத நோயாளிகள், கர்ப்பிணிகள் என யாரும் எங்கள் பகுதியில் இருந்து 17 கிலோமீட்டர் தூரமுள்ள வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கூட செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது' என்றார், வேதனையுடன்.

அரசு நடவடிக்கை எடுக்குமா

? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: தென்னை மரங்கள் பாதுகாப்பது குறித்து வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.